தொடர் கனமழை பெய்து வரும் கேரளாவின், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும் உயிரிழந்திருந்தனர். அங்கு பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சற்று முன் தெரிவித்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அங்கே சூழல் நிலவுகிறது.
























