அரசியல் சினிமா ஆன்மீகம் என்று தொடர்ந்து ஏதோ ஒரு ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் பாதைக்கு நடுவே பூ பூத்தது போல காதல் பற்றிய உரையாடலை அண்ணனோடு Saravanan Thangappa பகிர்ந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
சாதி மதங்களை கொண்டாட நாட்களை வைத்துக்கொண்டு, சங்கங்களை வைத்துக் கொண்டு பிரிவினைகளை வளர்க்கும் சக்திகள் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் காதலை கொண்டாட ஒரு நாள் அல்ல ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாட்டமாக கொண்டாடித் தீர்க்க வேண்டும்.
சாதி மதம் மறந்து அனைவரும் சமத்துவமாய் காதல் செய்வீர்!
கலித்தொகை, திருக்குறள், கண்ணதாசன், வைரமுத்து, மீரா தபூசங்கர் என்று உங்கள் மனங்களை தென்றல் தீண்டும் படியான கவிதைகளால் அலங்கரித்திருப்பார். முழுமையாக பார்த்து தமிழ்க்கவிதைச் சுவையை சுவைத்து மகிழுங்கள்.


























