நாயுடன் இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் உறவு கொள்ளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்றைய நவீன யுகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் ஒரு நோய் வலைதளங்கள் மூலம் தாங்கள் பிரபலமாகவேண்டும் என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள அவர்கள் தேடிக்கொள்ளும் வழி தான். தங்கள் திறமையை நிரூபித்து இணையத்தில் பிரபலமாவதை விடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியும், சகிக்க முடியாத கோமாளித்தனங்களைச் செய்தும், கவனிக்கபடவேண்டும் என்று அபாயகரமான செயல்களைச் செய்துமே இவர்கள் பிரபல்யத்தைத் தேடிக்கொள்கின்றனர். அவ்வாறு ஒரு இளவயதுப் பெண் அருவருக்கத்தக்க ஒரு செயலில் ஈடுபட்டு பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
டெனிஸ் ஃப்ரேசியர் என்ற 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இயற்கைக்கு முரணான வகையில் நாயுடன் பாலியல் உறவு கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் மிஸ்ஸிசிபி நகரின் போலீசார் குறிப்பிடுகையில், ’’எங்களுக்கு, பெண் ஒருவர் ஆண் நாயுடன் தனது வீட்டில் பாலியல் உறவு கொள்ளும் காணொலி இணையத்தில் பரவிவருதாக தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கினோம்’’ என்று கூறினர்.
தனது 17 வருட சட்ட அமலாக்கத்திற்கான அனுபவத்தில், தான் விசாரித்ததிலேயே தன்னை அதிகம் பாதித்த வழக்காக இது இருப்பதாக இதை விசாரித்த சர்ஜண்ட் ஜே.டி.கார்டர் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோ மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்ததாகவும், அதிகாரிகள் அதுகுறித்து விவாதிக்கக்கூட விருமபவில்லை என்றும் தெரிவித்தார்.
மைரிக் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணான டெனிஸ், தற்சமயம் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரணைப் படலத்தில் உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























