பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி, காவியா தாபர், மன்சூர் அலிகான், தேவ் கில், ராதாரவி, ஜான்விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், யோகி பாபு உட்பட பலர். நடித்திருக்கிறார்கள்.
கதைச்சுருக்கம் :-
பிச்சைக்காரன் 1-ல நோய் வாய்ப்பட்டு கிடக்கும் தாயை காப்பாற்ற மகன் ஆன்மீக நம்பிக்கையை நம்புகிறார். அப்போது சாமியார் சொல்லும் பரிகாரப்படி 48 நாட்கள் பிச்சைக்காரனாக இருந்து சேர்த்த பணத்தை கோவில் உண்டியலில் போட்டு தாயை மீட்கிறார் போன்று கதை இருக்கும்.
பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் விஜய் குருமூர்த்தி, சத்யா அப்படின்னு இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் விஜய் குருமூர்த்தி இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவரை தீர்த்து கட்டி இவரின் சொத்தை அபகரிக்க துடிக்கிறார்கள் விஜய் குருமூர்த்தியின் நண்பர்கள். அதற்கு டாக்டர், ஒருவர் மூளையை மற்றவருக்கு மாற்றும் சிகிச்சை முறை பற்றி சொல்ல உடனே இந்த கும்பல் விஜய் குருமூர்த்திக்கு நாம் சொல்கிற ஒருத்தன் மூளையை பொருத்துவது என்று முடிவு செய்கின்றனர். அவர் யார் என்றால் சத்யா என்கிற பிச்சைக்காரன். விஜய் குருமூர்த்தி உடலில் சத்யா மூளையை மாற்றிய பிறகு சத்யாவாக வாழ்கிறார். அவருடைய தங்கையை சின்ன வயதில் தொலைத்து விடுகிறார். தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணனாகவும் இருக்கிறார். விஜய் குருமூர்த்தி ஆட்களின் சொல்படி நடந்த சத்யாவுக்கு சொத்தில் ஒரு பங்கு கிடைத்ததா? சிறுவயதில் தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடித்தாரா? பணக்கார வாழ்க்கைக்குப் போன பிச்சைக்கார சத்யா ஏழைகளுக்கு ஏதும் செய்தாரா? விஜய் குருமூர்த்தி நண்பர்களின் சூழ்ச்சியில் இருந்து சத்யா தப்பித்தாரா? என்பது படத்தின் மீதி கதை.
விஜய் ஆண்டனி உண்மையாகவே இந்த படத்துக்கு அவர் உழைத்திருப்பது அவரது நடிப்பில் தெரிகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, எடிட்டிங்ன்னு ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட்டை விஜய் ஆண்டனியே கவனித்து இருக்கிறார். கவனமும் இருக்கிறார். கதாநாயகியாக வரும் காவியா தாபர் நன்றாக நடித்திருக்கிறார். கவர்ச்சியுடன் காதலையும் கூட்டி இருக்கிறார்.
சின்ன வயது சத்யா அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் கண்களில் கண்ணீர் கசிய செய்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு பணக்காரன் நினைத்தால் ஏழ்மையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என பல்வேறு விஷயங்களை யோசித்து காட்சி படுத்தியிருப்பது அருமை. முதல் பாகத்தில் அம்மா மகன் சென்டிமென்ட். இரண்டாம் பாகத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட். நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் வருவது அப்பட்டமாக தெரிகிறது. அதை சரி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆங்காங்கே சில தொய்வுகள் திரைக்கதையை பாதிக்கிறது.
கல்லூரும் பூவே பாடல் கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் மனதில் பதியவில்லை. சுமார் ரகம் தான்.
பிச்சைக்காரன் படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் இந்த இரண்டாம் பாகமும் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. யோகி பாபு இருந்தும் காமெடி ஒன்னும் பெருசா ஒர்க்கவுட் ஆகல. ஒளிப்பதிவாளர் ஓம் நராயனின் கேமரா கோணங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். டி.ஆர்.க்கு பிறகு அதிகமாக சினிமாவில் உள்ள துறைகளை தன் கையில் விஜய் ஆண்டனி வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த திரைப்படம் சென்டிமென்ட், காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு கமர்சியல் படம். ஒருமுறை திரையரங்கில் போய் பார்க்கலாம்.


























