லிஸ்டீரியா மோனோசைடோஜனஸ் என்ற ஒருவகை வைரஸ் பரவலின் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் Cadbury சாக்லெட்டுகள் அகற்றப்பட்டுவருகின்றன.
பால்பொருட்களைத் தயாரிக்கும் Muller என்ற உணவு நிறுவனம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு Cadbury சாக்லெட் பொருட்களை வாங்கிய இடத்திலேயே திரும்பத் தந்து அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாரும், வைரஸ் தாக்கம் உள்ளதால் அவற்றை உண்ணவேண்டாம் என்றும் வலியுறுத்திவருவதாக இங்கிலாந்து உணவு தரநிலைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, Daim Chocolate Dessert, Crunchie Chocolate Dessert, Flake Chocolate Dessert, Dairy Milk Buttons Chocolate Dessert, Dairy Milk Chunks Chocolate Dessert, Cadbury Heroes Chocolate Dessert, போன்ற Cadbury சாக்லெட் தயாரிப்புகளில் இந்த லிஸ்டீரியா வைரஸ் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இவற்றை வாங்கவேண்டாம் என்றும் உண்ணவேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இந்த லிஸ்டீரியா வைரஸ் உணவின் மூலம் உட்கொள்ளப்படும் பட்சத்தில் எலும்புகள், மூட்டுகள், மார்பு மற்றும் அடிவயிற்றில் உள்ள இடங்கள் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தி நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் (United States Centres for Disease Control) தெரிவிக்கிறது.
லிஸ்டீரியா வைரஸ் பெரும்பாலும் நீர், மண் மற்றும் சில விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் உள்ளிட்ட வேகவைக்காத உணவுப்பொருட்கள் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. பிற பாக்டீயாக்களைப்போல் அல்லாமல் இது குளிர்சாதனப் பெட்டிகளில் வளர்கிறதாம்.
லிஸ்டீரியா வைரஸ் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பொருளையும் சமைப்பதற்கு முன்பாகக் கழுவுவதும், பரிந்துரைக்கப்பட்ட அளவிலான சூட்டில் உணவைச் சமைப்பதுமே லிஸ்டீரியா வைரசால் ஏற்படும் லிஸ்டீரியஸ் நோயிலிருந்து காக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.


























