அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பாபா பிளாக் ஷீப்.
இந்த திரைப்படத்தில் அபிராமி, ஆர்ஜே விக்னேஷ் காந்த், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட், வினோதினி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் :-
சேலம் மாவட்டத்தில் இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இரண்டு பள்ளிகளுக்கும் ஒரே தாளாளர் தான். ஆண்கள் மட்டுமே படிக்கக்கூடிய மேல்நிலைப் பள்ளியும், இருபாலரும் படிக்கக்கூடிய மேல்நிலைப் பள்ளியும் அருகருகே இருக்கிறது. நிர்வாக வசதிக்காக இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக சேர்க்கிறார்கள். ஏற்கனவே இரண்டு பள்ளி மாணவர்களுக்கும் மோதல் மற்றும் பிரச்சனைகள் எப்போதும் இருக்கிறது. இப்போது ஒன்றான உடன் மீண்டும் அந்த பிரச்சினைகள் தொடர்கிறது. இதனை சமாளிக்க நிர்வாகம் மாணவர்களுக்கு ஸ்கூல் எலக்சன், அறிவியல் கண்காட்சி, தேர்வு என வைக்கிறார்கள். அப்துல் அயாஸ் தலமையிலும், என் பி தலைமையிலும் மோதல் அதிகமாக இரு குழுவுக்கும் தோழியாக அம்மு அபிராமி இருக்கிறார். யாரோ ஒருவர் தற்கொலை செய்யப் போவதாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதம் அம்மு அபிராமியிடம் கிடைக்கிறது. அந்த நபரின் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க அம்மு அபிராமி நினைக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா? இரண்டு பள்ளி மாணவர்களும் ஒற்றுமையாக இருந்தார்களா என்பது படத்தின் மீதி கதை?
கடந்த வருடம் கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம் பெரும் பேசு பொருளானது. அந்த கதையை மேலோட்டமாக எடுத்து இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்மோகன். முதல் பாதி முழுக்க பிளாக் சிப் சேனலில் வரும் காமெடிகள் வருகிறது. 2கே கிட்சின் ஸ்கூல் அலப்பறைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியில் அட்வைஸ்ய்யும், முதல் பாதியில் காமெடியையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமுருகன். எல்லோரும் மாணவர்களாக நடித்து அசத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கதையில் கொஞ்சம் நல்ல கவனம் செலுத்தி இருந்தால் நல்ல படமாக இந்த திரைப்படம் இருந்திருக்கும். தினமும் நாம் செய்தித்தாள்களில் படிக்கும் ஒரு விஷயத்தை கதையாக பண்ணி அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக தொட்டிருப்பது இந்த திரைப்படத்தின் மைனஸ். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது. இருந்தாலும் கதை ஒரே இடத்தில் நகர்வது சற்று அயர்ச்சி ஏற்படுத்துகிறது.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசை பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கூடுதல் பலம். பாடல்கள் ஓகே ரகம்.
மொத்தத்தில் ஸ்கூல் கன்டென்ட் சார்ந்த படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.


























