சூரிய குடும்பத்திற்கு அப்பால், பூமி போன்ற அமைப்பைக் கொண்ட, எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கிரகம் ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது. ஓய்வு பெற்ற ’ஸ்பிட்சர்’ விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளுடன், டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே செயற்கைக்கோளைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் எல்பி 791-18 டி என்று அழைக்கும் இந்த கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 90 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம், வாழ்நாள் முடியவிருக்கும் ஒரு சிறிய சிவப்பு நிற எரிநட்சத்திரத்தை சுற்றி வருவதாக நாசா கூறியுள்ளது.
இதுகுறித்து நாசாவின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜெஸ்ஸி கிறிஸ்டியன்ஸன், “வானியல் உயிரியலில் ஒரு பெரிய கேள்வி என்னவென்றால், பூமி மற்றும் அதற்கு அப்பால் உள்ள உயிரினங்களின் தோற்றம் பற்றி விரிவாக ஆய்வு செய்யும் துறை, டெக்டோனிக் அல்லது எரிமலைகளின் செயல்பாடு வாழ்க்கைக்கு அவசியமானதா என்பதைக் கண்டுபிடிப்பது தான்.
வளிமண்டலத்தை வழங்குவதைத் தவிர, எரிமலைகளின் இந்த செயல்முறைகள், பொருட்களை கிளறிவிட்டு கீழே மூழ்கி சிக்கிக்கொள்ளவைக்கலாம். கார்பன் போன்ற வாழ்க்கைக்கு முக்கியமானவை என்று நாம் கருதும் பொருட்கள் உட்பட’’ என்று இப்புதிய கோள் குறித்துக் கூறுகிறார்.


























