D PICTURES தயாரிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆஹா OTT -யில் வெளிவந்திருக்கும் திரைப்படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், மகத், ஆரவ், சந்தோஷ் பிரதாப், யாசர், சுப்ரமணியம் சிவா, விவேக் ராஜகோபால் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
கதை சுருக்கம் :-
ஒரு ரவுடி கும்பல் ஒரு சிறுமியை கடத்துவதை மகத் பார்த்து விடுகிறார். இதனால் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்க அவர் நானும் உன்னுடன் வருகிறேன் என மகத்துடன் வண்டியில் வருகிறார். இன்ஸ்பெக்டரும் ரவுடி கும்பல் தலைவனான சுப்பிரமணியம் சிவாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். கடத்தல் சதி வேலையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு உள்ளதை அறிந்து மகத் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். ஆனால் அவரை அந்த ரவுடி கும்பல் கொன்று விடுகிறது. மகத்தின் காதலியான வரலட்சுமி சரத்குமார் SI ஆக பணிபுரிகிறார். மகத் கொலைக்கு காரணமான ரவுடிகளையும், இன்ஸ்பெக்டரையும் பழிவாங்க வரலட்சுமியும், அவரது நண்பர்களும் திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் பழிவாங்கும் திட்டத்திற்கு முன்பே போலீஸ் ஸ்டேஷனில் வேறொரு மர்ம நபர் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். இன்ஸ்பெக்டரையும் ரவுடியையும் சுட்டது யார்? மகத் இறப்பிற்கு நியாயம் கிடைத்ததா? வரலட்சுமியும், மகத் நண்பர்களும் இந்த கேசிலிருந்து தப்பித்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
கதையின் ஒன்லைன் நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது ஆடியன்ஸுக்கு தெரிவது சற்று சறுக்கல். இயக்குனர் தயாள் பத்மநாபன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வரலட்சுமி சரத்குமார் போலீஸ் கெட்டப்புக்கு சரியாக பொருந்துகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட போர்ஷனை சரியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். பிக் பாஸ் ஆரவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. படத்தில் ஒரே மாதிரியான முகபாவனையை எல்லா காட்சிகளிலும் வெளிப்படுத்தி இருப்பது இன்னும் நடிப்பில் கூடுதல் கவனம் தேவை என்றே தோன்றுகிறது.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் கேமரா கோணங்கள் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. படத்தொகுப்பாளர்கள் ப்ரீத்தி பாபு ஆகியோர்களின் எடிட்டிங் ஓகே.
இசையமைப்பாளர் மணிகாந்த் கத்திரியின் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப விறுவிறுப்பான காட்சிகளில் கை கொடுக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். பாடல்களை இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த திரைப்படம் கமர்சியல் படமாகவும் இல்லாமல், இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் படக்குழுவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


























