மார்க் சக்கர்பெர்க் தலைமை செயல் அதிகாரியான விளங்கும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகள் இயங்கிவருகின்றன. பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மூன்று செயலிகளைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தட்டச்சு அமைப்பில் இயங்கக்கூடிய புதிய சமூக வலைதளத்தை ட்விட்டருக்கு போட்டியாக களமிறக்கவுள்ளது.
இதுகுறித்த ஆய்வுகள் மற்றும் சோதனை முயற்சிகளில் இறங்கியுள்ள மெட்டா நிறுவனம், இச்செயலியை இந்தாண்டு ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்காக கொண்டுவரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம், இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கப்படும் இந்த செயலியின் ஆரம்ப பதிப்பை முயற்சித்துப்பார்க்க, திறமையான ஏஜென்சிகள் மற்றும் பிரபலங்களை Meta நிறுவனம் தொடர்புகொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























