கடந்த பல மாதங்களாகவே அதிமுக – பாஜக இடையே நல்ல உறவு இல்லை. அதற்கு அண்ணாமலை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே உருவான பல முரண்பாடுகளின் ஒரு இறுதி முரண் தான் அண்ணாமலை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது அண்ணாமலைக்கு லாபம் என்றும் , பாஜகவுக்கு நஷ்டம் என்றும் கூறினார். எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவுக்கு பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கலாம். தற்போது, தனித்து மூன்றாவது கூட்டணி அமைத்து அதற்கு தலைமை தாங்கும் சூழலை உருவாக்கி அந்த வாக்கு வங்கி உயர்வுக்கு அண்ணாமலை காரணம் என்று மார்தட்டிக் கொள்ளும் வாய்ப்பை அவர் உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்ற கட்சிகள் தன்னுடன் கூட்டணியில் 2026இல் இணைவதற்காக இப்போதே வியூகங்களை வகுக்க துவங்கி இருப்பார் என்றும், “கூட்டணி ஆட்சி” என்ற யுக்தியை அவர் கைக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். இதனால், திமுகவின் கூட்டணியில் கலக்கம் நேரிடவும், திமுகவுக்கு ஒரு நெருக்கடியையும் உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வழக்கம்போல தமிழ்நாட்டின் அரசியல் களம் திமுக Vs அதிமுக என்று உருவாகி இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
முழு வீடியோவை காண : https://youtu.be/Q0mvN7pZvlU?feature=shared


























