ஜப்பானிய உணவகம் ஒன்றில் உணவு உண்ணும் சமயம் வாடிக்கையாளர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பயன்பாடு தற்சமயம் மனிதர்களிடையே தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை எல்லா செயல்பாடுகளின்போதும் எல்லா நேரங்கலின் போதும், எல்லா கட்டங்களிலும் செல்போன் என்ற ஒரு வஸ்து நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட்து. பெரும்பாலானோர் வீடுகளில் உணவு உண்ணும் சமயம் செல்போன் பயன்படுத்தவேண்டாம் என்று கட்டளை விதிக்கப்பட்டும், அதை செயல்படுத்த முடியாமல் உணவோடு சேர்ந்து செல்போனில் வரும் துணுக்குகளையும் மென்று தின்றுகொண்டிருப்போம்.
இ ந் நிலையில், அந்த கதையெல்லாம் எங்கள் உணவகத்தில் வேலைக்காகாது என்று புதுமையான கட்டுப்பாடு ஒன்றை புகுத்தி கவனிக்கவைக்கிறது ஜப்பானின் டோக்யோ பகுதியில் அமைந்துள்ள டெபு-சான் உணவகம் என்ற உணவகம். இங்கு வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் பீக் ஹவர்ஸ் எனும் நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் சமயம் முன்னதாக உணவு ஆர்டர் செய்தோர் செல்போன் பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்ள தாமதிப்பதால் இந்த கட்டுப்பாடு அங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கிய உணவகத்தின் உரிமையாளர் கோடா கய், ஒரு சமயம் நாங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சமயம், வாடிக்கையாளர் கிட்ட்த்தட்ட 4 நிமிடங்களுக்கு வங்கிய உணவை உண்ணாமல் செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்த்தை கவனித்தோம். பெரும்பாலான நேரங்களில் வாங்கிய உணவு சூடு குறைந்து குளிர்ந்துவிடும் வரையில் அவர்கள் தங்கள் செல்போன்களில் ஏதேனும் வீடியோவை பார்த்துக்கொண்டிருப்பர். மேலும் எங்கள் உணவகத்தில் 1 மி.மீ. அகலமே கொண்ட நூடுல்ஸ் உணவு தயாரிக்கப்படும். அதை உடனடியாக உட்கொள்ளவில்லையெனில் சுருங்கி, வீணாகிவிடும். அதனடிப்படையிலேயே உணவுகள் விரைந்து உண்ணப்படவேண்டும் என்று இந்த கட்டுப்பாடு என்று அவர் கூறுகிறார்.
இந்த டெபு-சான் உணவகம் டோக்யோ நகரத்தின் பெரிய நூடுல்ஸ் உணவகங்களில் ஒன்று. அங்கு மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் சுமார் 10 பேர் வரை சாதாரணமாக வரிசையில் உணவுக்காக்க் காத்திருப்பர் என்று கய் கூறுகிறார். மேலும் உணவகத்தின் இருக்கைகள் வாடிக்கையாளர்களால் நிரம்பியதும் அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு செல்போன் பயன்படுத்த்த் தொடங்கினால் உடனடியாக அவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று தடுத்து நிறுத்துவேன் என்கிறார் கய்.


























