மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் உள்ள பாண்டிவாடா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகளுடன் கான்ஹிவாடா வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்கச் சென்றார். திடீரென அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுமியை தாக்கியது.
கண் முன்னால் இந்தக் காட்சியக்க் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தந்தை, கையில் கிடைத்தவற்றை கொண்டு சிறுத்தையை விரட்ட முயன்றார். ஆனால் சிறுத்தை அவரையும் தாக்கியது. சத்தம் கேட்டுத் திரண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் சிறுத்தையைக் கூட்டமாகச் சேர்ந்து விரட்டினார்கள். இதில் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்தச் சம்பவத்தை அடுத்து சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுத்தை தாக்கியதில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
























