கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விவரத்தை கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க, தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை மாவட்ட நிலையில் ஏற்படுத்தப் படுகிறது. பொதுமக்களுக்கு எளிதாக அணுக 1800 425 5880 என்ற இலவச தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியினை அழைப்பு மையத்தின் இலவச எண் – 1962 அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 1294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் (ERT) Emergency Response Team ஏற்படுத்தப்பட்டு, விலங்குகள் காப்பகம் – Shelters for abandoned animals அமைக்கப்படுகிறது. 1740 கால்நடை மீட்பு மையங்கள் /தங்குமிடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிறுவப்பட உள்ளன. அடையாளம் காணப்பட்ட இடங்களில், மீட்கப்பட்ட கால்நடை / கோழிகளின் போக்குவரத்ததிற்கும், தீவனம், தீவனப்பயிர் மற்றும் குடிநீரரை எளிதாக திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட விலங்குகள் அடையாளம் காணப்பட்டு மீட்பு மையங்கள் /முகாம்களுக்கு விரைவாக மற்றும் தீவிரமாக கொண்டு செல்லப்படும். அரசுசாரா அமைப்புகளால் நடத்தப்படும் கோஷாலாக்கள் மற்றும் மீட்பு மையங்களில் விலங்குகளின் ஊட்டச்சத்து போதுமான உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பது உறுதி செய்யப்படும். காயமடைந்த விலங்குகளுக்கும் உடனடியாக கால்நடை மருத்துவ சேவை வழங்கப்படும்.
மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து உள்ளூர் பகுதிகளிலும் பருவமழைக்கு முன்னதாக, விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் (ADIU) தடுப்பூசி நடவடிக்கைகளை கண்காணிக்கும்.
கோமாரி நோய், தொண்டை அடைப்பான், சப்பை நோய், அடைப்பான், ஆட்டம்மை மற்றும் வெள்ளைக்கழிச்சல் ஆகிய நோய்கள், மாவட்டங்களில் பருவமழைக்கு முன்னும் பின்னும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நிகழ்வு பற்றி கண்காணிப்பு செய்ய நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. கோழிப்பண்ணைகளில் கள நிலை விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை, மேற்கொள்ளப்படுகின்றது.
மருந்துகளின் இருப்பு (Emergency medicines and fluids availability)
எந்தவொரு அவசரகால தேவைகளையும் சமாளிக்கவும், கால்நடை நிலையங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் கால்நடைபராமரிப்புத் துறையில் போதுமான கால்நடை மருந்துகள் இருப்பில் உள்ளது. 56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் வெள்ளத்தின் போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும்.
தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல் (Fodder Availability)
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையத்தில் (CBFD) தொகுதி வாரியாக தீவனம் கிடைப்பது (பச்சை மற்றும் உலர்) மற்றும் பற்றாக்குறை நிலை பற்றிய தரவுத்தளம் பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து (Continuesly) தீவனம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பட்டியல், பரப்பு மற்றும் தீவன வகைகளுடன் (தொகுதி வாரியாக) பராமரிக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் அரசு பண்ணைகளில் கிடைக்கும் உபரி தீவனம் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் – (Drinking water availability
கால்நடை நிறுவனங்களில் கட்டப்பட்ட 1215 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் கிடைப்பது (Drinking water availability) உறுதி செய்யப்படுகிறது. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து கிருமி நீக்கம் செய்ய (Ensuring Hygiene and sanitation) பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, முறையான உரம் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம் நோய்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கால்நடைகள் மற்றும் கோழிகளின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக 1294 கால்நடை சுகாதார முகாம்கள் (Veterinary Health camps) அமைக்கப்படுகிறது. அனைத்து களப் பணியாளர்களும் அதற்கேற்ப கவனமுடன் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























