உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி சென்னை பெருங்குடியில் உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொரோனாப் பெருந்தொற்றில் அரும்பணி ஆற்றிய முன் களப்பணியாளர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். Brook field என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்நிகழ்ச்சியை நடத்தியது.
கொரானா நோய்த்தொற்று ஆரம்பித்த காலந்தொட்டு, முன்களப் பணியாளர்களின் பணி அளப்பரியது. பல உயிர்களை காப்பாற்றுவதற்கு அவர்களின் பணி பேருதவியாக இருந்திருக்கிறது. இருந்து கொண்டிருக்கிறது. கொரானா காலப் பணியில் பல முன் களப்பணியாளர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். தன்னலமற்ற அவர்களின் சேவை பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களை பாராட்டி கௌரவிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்களப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மனவளக்கலை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
























