சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை ஆபாசப்படம் எடுத்த வழக்கில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரை பிரிகிற முடிவில் உள்ளார் ஷில்பா ஷெட்டி.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் விஜய்யுடன் குஷி, பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் கனவுக்கன்னியாகவே வலம் வந்த இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது ஆபாச வீடியோக்களை படம்பிடித்து விற்பனை செய்வதாகக் கூறி அவரது கணவர் ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை மாதம் மும்பை போலீஸ் கைது செய்தது.
அதன் பிறகு, நேற்று அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது மொபைல், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதனை 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கபட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடக்கத்தில் தன் கணவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது போல் பேசி வந்த ஷில்பா ஷெட்டி, தற்போது வாழ்வில் தவறான முடிவை எடுத்து விட்டதாக வருந்துவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தன் கணவரைப் பிரிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
























