அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி. கொரானா கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றி கூட்டம் நடத்த அறிவுறுத்தல்.
ஆண்டுதோறும் மக்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளும் வகையில் சுதந்திர தினம், குடியரசு தினம் தொழிலாளர் தினம் மற்றும் காந்தி பிறந்த நாள் ஆகிய நான்கு நாட்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரானா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரானா கட்டுப்பாடுகளுடன் கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
























