அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. தேர்தலுக்காக, உத்தர பிரதேச அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் (பொறுப்பு) பிரியங்கா காந்தி பிரசாரத்தில் தீவிரமுடன் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
உரம் வாங்க வரிசையில் நின்றபோது 4 விவசாயிகள் லலித்பூர் பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் உறவினர்களை பிரியங்கா காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
டெல்லி போலீசார், டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடங்களில் இருந்து தடுப்பு சுவர்களையும் கம்பிகளையும் அகற்ற தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில்,
”விவசாயத்துக்கு எதிரான 3 சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் எனவும் விவசாயிகளை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் இப்போது தான் அகற்றப்பட்டுள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.
























