தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிகல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “எனக்கும் தீபிகாவுக்கும் இரண்டு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெயர் கபீர் பல்லிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பல்லிகல் கார்த்திக்” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
























