போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானை மும்பை உயர்நீதிமன்றம் பெயிலில் விடுதலை செய்திருக்கிறது. மேலும், பிணை விதிகள் நாளை அறிவிக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இம்மாதம் 3 ம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் இந்த அதிரடி சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்திய 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 13 பேரில் பிரபல இந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு பெயில் வழங்கியிருக்கிறது. மேலும் பெயில் விதிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என என தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
























