இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்து வெற்றிமாறன் பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால்தான் அத்திரைப்படம் தாமதமாகிறது என்பதையும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்களுக்காக இருமுறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அவர் தற்போது தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்பேட்டியில் அவர் விஜய்யுடன் இணைந்து படம் இயக்குவது பற்றிக் கூறியிருக்கிறார்.
அப்படம் குறித்த கேள்விக்கு, தனது கதைத் தயாரிப்பினால்தான் அத்திரைப்படம் தாமதமாகி வருகிறது. விஜய் தரப்பில் போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள் என்றும். சம காலத்தைய சூப்பர் ஸ்டாரான விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
























