தெற்கு வங்கக் கடலின் மத்தியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 3 நாட்களில் தமிழக கடற்கரையை அடையும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தெற்கு மாநிலங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெருமளவு மழைபெய்ய வாய்ப்பிருக்கின்றது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதன் உள்மாவட்டங்களிலும் புதுவை மாநிலத்தில் புதுவை நகரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
























