தமிழக அரசுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கேரளாவில் கனமழை பெய்த நிலையில் 137.60 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் குறித்து உயர்நிலை குழு கூட்டம் காணொலி காட்சி வழியே நடந்தது.
தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, கேரளா தரப்பில் அணையின் நீர்மட்டத்தை 137 அடி வரை மட்டும் பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இத்தகவலை கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் தன் சமூக வலைதள பக்கத்தில், பகிர்ந்துள்ளார்.
























