விரைவில் நடைபெறவிருக்கிற முஷ்தாக் அலி கோப்பைத் தொடர் போட்டிகளுக்கு மஹாராஷ்டிர மாநில அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கிரிகெட் சங்கம் தெரிவித்திருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் முஷ்தாக் அலி 20 ஓவர் கோப்பை தொடர் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. அப்போட்டிக்கு மஹாராஷ்ட்ர அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் தலைமை தாங்கி வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தொடர் போட்டியில் எலைட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதவிருக்கின்றன. நடப்பு சாம்பியனாக தமிழ்நாடு அணி உள்ள நிலையில் இந்த ஆண்டு யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்கிற ஆவலும் கிரிகெட் ரசிகர்களை தொற்றியுள்ளது.
ருத்துராஜ் கெய்க்வாட் ஐ கேப்டனாக நியமித்ததில் மஹாராஷ்ட்ர கிரிகெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றார். பல போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்குக் காரணமாகவும் இருந்தார். திறமையான ஆட்டக்காரரான ருத்துராஜ் ஒரு அணியை வழி நடத்தவிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
























