கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’பொது விநியோகத்திட்ட விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அவர்கள் பணிபுரியும் ரேசன் கடைகள் எந்த கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த சங்கத்தின் பணியாளராகவே கருதப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’ஊதிய ஒப்பந்தம் மற்றும் துணை விதிகளின்படி, சங்க பணியாளர்களுக்கு திருமணம், கல்விக்கடன், வாகனக்கடன், வீடு கட்டும் கடன் மற்றும் நுகர்வோர் கடன்கள் வழங்கப்படுவதைப் போன்றே, ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘உரிய ஒழுங்குமுறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்தி தகுதியின் அடிப்படையில் ரேசன் பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அனைத்து மண்டல இணை பதிவளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
























