புதிதாக கொரோனா தொற்று சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது. 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ(Lanzhou) நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சூழல் தவிர்த்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பின்னர் உலகம் முழுவதும் பரவி பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. தற்போது சீனாவில் மீண்டும் தொற்று அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

29 புதிய உள்நாட்டு நோய்த்தொற்றுகள் பதிவாகியதால் சீனாவில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ(Lanzhou) நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக 29 உள்நாடு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதில், 6 தொற்று வடமேற்கு மாகாணமான கன்சுவின் மாகாண தலைநகரான லான்ஜோவில் பதிவாகியுள்ளது.

மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர சூழல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. லான்ஜோ நகரில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
























