கடந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 என்ற நிலையிலேயே இருக்கிறது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் உதகையில் அலைமோதுகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவின் மகனுக்கு கொரோனா உறுதியானதால், கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பியபோது, அவரை வழியனுப்பவும் அவர் வரவில்லை.
தற்போது இன்னசென்ட் திவ்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதுி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் அவர் தன்னை பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
























