இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவரும் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான தாதா சாகேப் பால்கே நினைவாக தாதா சாகிப் பால்கே விருது நிறுவப்பட்டது. திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தரை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
”திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!!” எனப் பதிவிட்டுள்ளார்.
























