இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து பொதுமக்களிடம் பேசினார்.
தொடர்ந்து, அங்கிருந்து தலைமை செயலகம் புறப்படும் முன்னர் மு.க.ஸ்டாலின் கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறி, முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம், ”பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதிகள் உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா?” என மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
அதிகாரிகள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களிடையேயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென பேருந்தில் ஏறி ஆய்வு செய்தது பரபரப்பை ஏடுத்தியது.
























