லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் இயக்கி தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் ரன்ன ரன்னர் அப் பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பலர் அடையாளம் காணப்பட்டு வெளியே வந்திருக்கிறார்கள். தற்போது பிக் பாஸ் சீசன் 5 வெளியாகிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனில் பங்கேற்ற ரைசா ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற பிறகு நல்ல வெளிச்சம் கிடைத்து தற்போது லிஃப்ட் என்கிற படத்தில் நடித்து வெளியானது. அதே சீசனில் ரன்னர் அப்பாக வந்த தர்ஷனும் – லாஸ்லியாவும் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படியாக பிக் பாஸ் வந்து வெளிச்சம் பெற்று அதன் மூலம் திரைத்துறைக்கு செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசன் 4ல் ரன்னர் அப் ஆக வந்த பாலாவும் தற்போது சினிமாவில் நடிக்கவிருக்கிறார். லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்திரன் முதல் முறையாக இயக்கும் திரைப்படத்தில் பாலா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்திரன் பிக் பாஸ் குறித்த விமர்சன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
























