இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் ‘ராம் சரண் 15’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கியது.
இயக்குநர் ஷங்கர் ராம் சரண் தேஜாவின் 15வது படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைக்க, தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். கியாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 8ம் தேதி இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அப்பூஜையில் கலந்து கொண்டனர். 170 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 21ம் தேதி தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தள்ளி இன்று தொடங்கியிருக்கிறது. ராம் சரண் ரசிகர்கள் இத்தகவலை சமூக வலைதளங்களில் பெருமளவு பரப்பி வருகின்றனர்.
























