போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆா்யன் கான் உடைய நீதிமன்றக் காவல் அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 3ம் தேதி மும்பையில் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் இருந்த 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா். அவா்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவர். அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டித்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை ஏற்கனவே கடந்த 8ம் தேதி மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், கடந்த புதன்கிழமை மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு அக்டோபர் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
























