ரோம் திரைப்பட விழாவில் ஹாலிவுட் இயக்குநர் குவண்டின் டாரண்டினோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட் இயக்குநர் குவண்டின் டாரண்டினோ தமிழ் திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். தனது அபாரமான திரைக்கதைக்காக உலகெங்கும் கவனிக்கப்பட்ட இயக்குநர். இவர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு ‘பல்ப் ஃபிக்சன்’ திரைப்படம் இன்றளவிலும் திரைக்கதைக்கான ஓர் பாடப்புத்தகமாகவே கருதப்படுகிறது. வன்முறையை ஃபேண்டஸியாக காட்டும் இயக்குநர் டாரண்டினோ.

சிறிய புள்ளியிலிருந்து திரைக்கதையை விரிவாக்கிக்கொண்டே செல்வது இவரது பாணி. பழைய கதையையே புதிய பாணியில் சொல்பவர். பழிவாங்கல் கதையை வைத்து உலகெங்கிலும் பலநூறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஒரு பெண் பழிவாங்கும் கில் பில் படத்தில் அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தால் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. இங்கிலோரியர்ஸ் பஸ்டர்ஸ், டிஜாங்கோ, ஹேட்ஃபுல் எய்ட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றவை.
ரோம் திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் டேனியல்லாவுடன் அவ்விழாவுக்கு வந்த அவர் அவ்விருதினைப் பெற்றார். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் விருது பற்றி நெகிழ்ந்ததோடு, தனது அடுத்த படம் கில் பில் படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
























