முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு குடலிறக்கம் பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காகத்தான் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
























