எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் கடந்த 17 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், சசிகலா. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் அன்று அவர் ஏற்றினார். அப்போது அங்கிருந்த கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சசிகலா மீது காவல் நிலையத்தில் இன்று அதிமுக புகார் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலிருந்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலா மீது அந்த புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
























