கிரிகெட் பயிற்சிக்கு வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இயக்குநர் ஷங்கரின் மருமகனும், மதுரை பேந்தர்ஸ் கிரிகெட் அணியின் உரிமையாளருமான ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் பயிற்சிக்காக கிரிகெட் கிளப்புக்கு வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தாமரைக் கண்ணன் என்கிற பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி கிளப் நிர்வாகத்திடம் இப்பிரச்னையை கொண்டு சென்ற போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் சிறுமியை சமாதானப்படுத்தியுள்ளனர். இதன் பிறகு சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றும் அதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததற்காக கிரிக்கெட் கிளப் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோஹித், செயலாளர் வெங்கட் ஆகியோர் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ரோஹித் என்பவர் கிரிகெட் வீரர் ஆவார். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும், இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவரும் ஆவார்.
























