கேரளாவில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இடுக்கி மாவட்டம் செர்தோணி அணை திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள செர்தோணி அணையின் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேறுகிறது.கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையான இடுக்கி செர்தோணி அணை நிரம்பியது.
இதன் விளைவாக தண்ணீரை வெளியேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்று அந்த அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையில் நீர் வரத்து அதிகம் உள்ள காரணத்தால் தற்போது அந்த அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அணையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இடுக்கி செர்தோணி அணை 1973ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதிருந்து இந்த அணை மூன்று முறை மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. நான்காவது முறையாக தற்போது அணை திறக்கப்பட்டிருக்கிறது.
























