சென்னை ஐஐடியில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். வேலை வேண்டுவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Project Associate(Embeddec System Design/Optical Design) பணிக்கு மாத சம்பளம் 21,500 – 30,000 ரூபாய் வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் ECE, EEE போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
Junior Technician(Electronics/Mechanical) பணிக்கு மாத சம்பளம்16,000 – 25,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில், ECE, EEE போன்றவற்றில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு www.icandsr.iitm.ac.in/recruitment என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுதொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
























