தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் சிறப்பு டீசர் பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். சாஹோ படத்தை இயக்கிய ராதா கிருஷ்ண குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்ரமாதித்யன் யார்? என்கிற கேள்வியோடு டீசர் வெளியாவதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. சாஹோ படத்தைப் போலவே இத்திரைப்படமும் தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

அக்டோபர் 23ம் தேதி பிரபாஸின் பிறந்த நாளையொட்டி அப்படத்தின் சிறப்பு டீசர் வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இத்திரைப்படம் 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகவிருக்கிறது.
























