சமந்தாவின் விவாகரத்துக்கு, அவருக்கும் ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக காரணமாக இருக்க முடியாது என அண்மையில் ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியளிக்கிறார் என்றாலே திரையுலகம் கிடுகிடுக்கும். தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தொடங்கி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என சகல தரப்பினர் மீதும் பாலியல் புகார் வைத்தவர் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டி இன்று யார் குறித்துப் பேசப்போகிறார் எனத் தமிழ், தெலுங்கு திரையுலகம் நெஞ்சில் கை வைத்து காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. மீண்டும் களத்திற்கு வந்த ஸ்ரீரெட்டி, சமந்தா விவாகரத்து குறித்து பின்வரும் கருத்தை தெரிவித்தார்.

தெலுங்கு சினிமாவின் பேசுபொருளாக இப்போது வரைக்கும் சமந்தா, நாக சைதன்யாவின் பிரிவுதான் இருக்கிறது. ஏன் அவர்களுக்குள் விரிசல் என்பதற்கு விடை கண்டுபிடிக்க பலரும் பல்வேறு விதமான ஊகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பரபரப்பான சூழலில் ஸ்ரீரெட்டிக்கு தெரியாத ரகசியம் உண்டா என்ற கோணத்தில் அவரிடம் அண்மையில் சமந்தா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக சமந்தாவுக்கும், காஸ்ட்யூம் டிஸைனர் ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பே பிரிவுக்கு காரணம் என்ற ஒரு வதந்தி திரையுலகில் உலவுகிறது. இதே கேள்வியை ஸ்ரீரெட்டியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி, ’சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் ப்ரீத்தம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ எனத் தன் வழக்கமான பாணியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
ஸ்ரீரெட்டிக்கு ப்ரீத்தம் குறித்து எப்படி தெரியும் என்பதைத் தாண்டி, அவரின் இந்த விளக்கத்தால் சமந்தா – ப்ரீத்தம் ஜுகல்கர் உறவின் சர்ச்சையின் பரபரப்பு குறையத் தொடங்கி உள்ளது.
























