பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமானங்களுக்கான எரிபொருளான டர்பைனை விட வாகனங்களுக்கான இந்த எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”மத்திய அரசு மிரட்டி வரி பறிப்பதாகவும், இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை.. மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுடன் தான் இருப்பதாகவும், தொடர்ந்து குரல் எழுப்புவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
























