காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பெண் முதல்வர் என 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் பொதுமக்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டது காஷ்மீர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமடைந்தது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஐ.ஜி. விஜயகுமார் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ”காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் 3 பயங்கரவாதிகளை நாங்கள் சுட்டு கொன்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
























