இன்று மாலை துபாய் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே முதல் அணியாக தகுதி பெற்றது. ஆனால் கொல்கத்தா கடைசி அணியாக தகுதி பெற்று பெங்களூரு, டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் என 3 பேரும் தரமாக பந்து வீசி வருகிறார்கள். கொல்கத்தாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது சுழற்பந்து வீச்சு தான்.
சிறப்பான சுழற்பந்து வீச்சால்தான் கொல்கத்தா பேட்டிங்கில் மந்தமாக இருந்தாலும் குறைந்த ரன்களில் எதிரணியை அவுட்டாக்கி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் சென்னை அணியின் பேட்டிங் வரிசை கொல்கத்தா அணிக்கு சவாலகவே இருக்கும். ஆரம்பத்தில் ருதுராஜ், டூபிளெசிஸ். மிடில் ஆர்டரில் உத்தப்பா, ராயுடு, தோனி. பின்வரிசையில் ஜடேஜா, பிராவோ என பலமாக இருப்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
கடைசி போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் சிஎஸ்கே களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணியில் காயம் காரணமாக விளையாடமல் இருக்கு ரஷல் இன்றையப் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. சென்னை அணியை சமாளிக்க ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் தேவைப்படுவதால் ரஷலை களமிறக்க கொல்கத்தா திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில் இந்த மாற்றம் சென்னை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஷகிப் உல் ஹசனுக்கு பதிலாக ரஷல் இன்றையப் போட்டியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

ருதுராஜ் கெய்க்வாட் டு பிளெஸிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும்,
சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயான் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன் அல்லது ரஷல், சுனில் நரைன், சிவம் மாவி, லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தா அணிக்காகவும் களமிறங்குகிறார்கள்.
























