அக்கிராஜு ஹரகோபால் என்ற ராமகிருஷ்ணா (வயது 57), நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரில் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர், சத்தீஷ்கார், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளார். அவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீப காலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனை உளவு பிரிவு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில் சத்தீஷ்காரின் தெற்கு பஸ்தார் மாவட்டத்தில் தண்டகாரண்ய பகுதியில் வசித்து வந்த அவர் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், அவரது மரணம் பற்றி உறுதிப்படுத்தும் வகையிலான அறிக்கை எதனையும் மாவோயிஸ்டு அமைப்புகள் இன்னும் வெளியிடவில்லை.
























