ஓவிய பட்டதாரி பெண்ணான, புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி, தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவத்தை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.
இன்று சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்தும் வகையில் ஓவியர் அறிவழகி 12 அடி உயரம் மற்றும் 12 அடி அகலத்தில் தோனியின் உருவத்தை தத்ரூபாமாக வரைந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

2 நாட்களில், 7 கிலோ கோலமாவை கொண்டு தோனியின் உருவத்தை ரங்ககோலியாக வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தை மட்டுமல்லாமல் தோனி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன். எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகரான இவர், அவர் மீதான தனது நம்பிக்கை, சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது வீட்டை முழுமையாக மஞ்சள் வண்ணத்தில் மாற்றியிருந்தார். மேலும், வீட்டின் முகப்பில் தோனியின் உருவப் படங்களையும் இடம்பெறச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























