ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடாக 6-வது முறையாக இந்தியா பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில், மனித உரிமைகள் ஆணையத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இத்தேர்தலில் 6வது முறையாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைகான இந்திய தூதர் திருமூர்த்தி, இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஜனநாயக மற்றும் பன்முக தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதாவது 2024-ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
























