ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் 10 மணி நேரத்துக்குள்ளாகவே 5 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு சிவா இயக்கும் திரைப்படம் என்பதோடு சூப்பர் ஸ்டார் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருந்தது. இந்நிலையில் அப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ஹிட்டடித்தது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அதன் டீசர் வெளியிடப்பட்டிருந்தது.
ரஜினி இளமைத் துள்ளலோடும், பெரும் மாஸோடு தோன்றும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. “நான் காட்டாறு… எனக்கு கரையும் கிடையாது… தடையும் கிடையாது” போன்ற வசனங்கள் எல்லாம் ரஜினி ரசிகர்கள் விசில் போட வைக்கும்படி அமைந்துள்ளன. முக்கியக் கதாப்பாத்திரங்கள் யாருமின்றி முழுக்க ரஜினி மட்டுமே தோன்றும் அந்த டீசர் ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இந்நிலையில், டீசர் வெளியாகி 20 மணி நேரத்துக்குள்ளாகவே 50 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் ரஜினி ரசிகர்கள் டீசரைப் பாராட்டி கருத்திட்டுள்ளனர். இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி!
























