கோரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் விதிமுறைகள் குறித்துப் பார்ப்போம்.
மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்குபெற அனுமதி.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் வரை கலந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் மற்றும் உணவகங்கள் இன்று முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வார இறுதிநாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவை இன்று முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசர்கள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
























