ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பெங்களூரு அணி வீரர் சஹலுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் அதற்கான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர் என்கிற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சாளர் சஹல் பெறுகிறார். 14 விக்கெட்டுகள் எடுத்து சஹல் முதல் இடத்திலும் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 11 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் அக்ஷர் படேல் 9 விக்கெட்டுகள், நான்காவது இடங்களில் ரஷித் கான் மற்றும் ரவி பிஸ்னோய் 8 விக்கெட்டுகள் பெற்றிருக்கின்றனர். அரையிறுதிக்குள் நுழைந்த பெங்களூரு அணி கொல்கத்தாவிடம் தோல்வியுற்று வெளியேறியிருக்கிறது. சஹலுக்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா அணியைச் சேர்ந்த சுனில் நரேன் இருக்கிறார். கொல்கத்தா அணி அரையிறுதியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை வென்று இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. இறுதிச்சுற்றில் சுனில் நரேன் 3 விக்கெட்டுகளுக்கும் அதிகம் எடுக்கும் நிலையில் சஹலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
























