நாம் தமிழர் கட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவது போல உள்ளாட்சி தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டை தொகுதியில் உள்ள பூட்டுத்தாக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அருண் போட்டியிட்டார். நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இது போலவே, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 26 பேர் ஊராட்சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்குப் போட்டியிட்டவர்களில் யாரும் வெற்றி பெறவில்லை. தேமுதிகவும் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
























