ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிகெட் அணிக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்திய கிரிகெட் வாரியம்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இந்திய கிரிகெட் வாரியம் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அணியின் கிட் ஸ்பான்சராக 2020 ஆண்டிலிருந்து எம்.பி.எல் நிறுவனம் இருந்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் பெயர் ஜெர்ஸியில் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணிக்கே உரித்தான கருநீல நிறத்தில் ஜெர்ஸி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வீரர்கள் புதிய ஜெர்ஸியை அணிந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய ஜெர்ஸிக்கு வரவேற்பு கிடைத்திருப்பதோடு கிரிகெட் ரசிகர்கள் பலரும் அதிருப்தியையும் வெளிப்பத்தியிருக்கின்றனர்.
























